Friday, 29 September 2017

கனவு கன்னியே - காதல் கவிதை

Kanavu Kanniye - Kadhal Kavithai 

கனவு கன்னியே
உனேயே எண்ணியே
காத்துக்கிடப்பேன் நாள்தோறும்
இரவும் வருமே
நிலவும் வருமே
உன் நினைவு சுடுமே
ஏன்தானோ

நிலவு தேய்யலாம்
உன் நினைவு என்றுமே - தேயாதே
காலம் மாறலாம்
என் காதல் என்றுமே - மாறாதே

மாயக்காரியே
மயக்கிபோறியே
மனச கொஞ்சம் நொறுக்கிபோறியே
இது சரிதானா

தரையில் விழுந்த மீனை போல
என் தனிமை சுடுதே
இனியும் கொடுமை ஏன்தானோ
காலம் மாறுமோ
என் காதல் சேருமோ
காத்துக்கிடப்பேன்
உன் கரம் சேர

- Annamalai Thangaraj

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கனவு கன்னியே - காதல் கவிதை Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj