Friday, 18 August 2017

விவசாயி கடைசி பக்க சேதியிலே - கவிதை

மண்ணை நம்பி  விதை விதைச்சேன்
மழையை நம்பி நெல்லு  வச்சேன்
அடை மழை காலமது
அடைகாத்து நானும் வச்சேன்
அணை கடந்து வெள்ளம் வந்து
அடிச்சிப்போனது எந்தன் உயிரு

அடுத்து வந்த கோடையில்
கலங்காது நானும் கரும்பு வச்சேன்
அக்னி வெயிலே வேலையிலே
அடைகாத்து நானும் வச்சேன்
பொய்த்து போனது மேகம்
வெந்து தீர்த்தது எந்தன் தேகம்
வேதனையில் கண்ணு குளமாச்சி
வேர்வை உரமாச்சி
கருணையற்ற வெய்யிலே
கருகிப்போனது எந்தன் உயிரு

வருத்தம் மறந்து வாழை வச்சேன்
வாழை வளரும்  வேலையிலே
புயல் காத்து ஒன்னு
கடந்துபோனது எந்தன் தோட்டம்
உடைந்து போனது எந்தன் உயிரு

வச்ச நெல்லு வீடு சேரல
விதை நெல்லுகூட மீரல
நீதி கேட்டு வீதி வந்தேன்
நட்டது மூணு போகம்
நட்டஈடு நாலு ரூவா
நாதியற்று வீதியிலே
நானும் செத்தேன்
கடைசி பக்க சேதியிலே

Annamalai Thangaraj

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: விவசாயி கடைசி பக்க சேதியிலே - கவிதை Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj