Friday, 25 August 2017

இது என்ன மாயம் - காதல் கவிதை

ஒரு முறை பார்த்தாய் உறையவைத்தாய்
சிறு புன்னகையால் என் உயிர் பறித்தாய்
உடல் மட்டும் இங்கே இருக்கிறதே
உயிர் உன்னுடன் சேர்ந்தே நடக்கிறதே
புன்னகை பொழியும் பூங்காற்றே
உன் முகவரி எங்கே சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ

இது என்ன மாயம் தெரியவில்லை
இதுவரை எனக்கேன் புரியவில்லை
உயிரின்றி இதயம் துடிக்கிறதே
உன்பெயர் மட்டும் நினைக்கிறதே
ஒருமுறை காதல் சொல்வாயோ
உன் மௌனத்தாலே எனை கொல்வாயோ

-Annamalai Thangaraj


Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இது என்ன மாயம் - காதல் கவிதை Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj