Sunday, 28 May 2017

Thirukural - Naanuththuravuraiththal - Kural 1131

அதிகாரம் : நாணுத் துறவுரைத்தல்
Adhigaram: Naanuththuravuraiththal
Chapter:  The Abandonment of Reserve

இயல்: களவியல்
Iyal:  Kalaviyal
Chapter Group: The Pre-marital love

பால்: காமத்துப்பால்
Paal: Kamathupaal
Section: Love

குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

விளக்கம் : காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை

Couplet 1131:
To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remains

Explanation : To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse

Transliteration : Kaamam Uzhandhu Varundhinaarkku EmamMatalalladhu Illai Vali

கலைஞர் உரை:
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

மு.வரதராசனார் உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது , சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும் , அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம் . இது காதல் மிக்குழி நிகழ்வது ஆகலின் , காதற்சிறப்புஉரைத்தலின் பின் வைக்கப்பட்டது.] (சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.).

மணக்குடவர் உரை:
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தம் காதலியோடு காமத்தினை அனுபவித்துப் பின்பு அது பெறாமல் இருக்கும் ஆடவர்க்கு பழங்காலந்தொட்டு வருகின்ற பாதுகாப்புமுடன் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Naanuththuravuraiththal - Kural 1131 Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj